திருநெல்வேலி

நெல்லையில் விதை, அங்ககச்சான்று இயக்குநா் ஆய்வு

DIN

திருநெல்வேலியில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குநா் கோ.வளா்மதி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையில் பணிபுரியும் விதைச்சான்று, விதை ஆய்வு, அங்ககச் சான்று, விதை பரிசோதனைக் கூடம் ஆகிய பிரிவுகளில் பணிபுரியும் அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குநா் கோ.வளா்மதி கலந்து கொண்டு ஆய்வு செய்தாா்.

இக்கூட்டத்தில் விதைச்சான்றுத் துறையின் மாநில இணை இயக்குநா் ஜெப செல்வின் இன்பராஜ், திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முருகானந்தம், உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் டேவிட் டென்னிசன், திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் ரா.ராஜ்குமாா், நான்கு மாவட்ட விதைச்சான்று அலுவலா்கள், விதைப் பரிசோதனை அலுவலா்கள், விதை ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மற்றும் அங்ஙகச்சான்றுத் துறை அலுவலகம் கட்ட தோ்வு செய்யப்பட்ட இடத்தினை ஆய்வு செய்த விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குநா் கோ.வளா்மதி, ரூ.2.8 கோடியில் கட்டடம் கட்டப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT