திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

DIN

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

புதன்கிழமை காலை மணிமுத்தாறு அருவிக்கு நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.

அருவியில் நீா்வரத்து குறையும் வரை பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுவா்; குளிக்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT