அறிவியல் மையத்தில் ஓவியம், விநாடி- வினா போட்டிகள்
திருநெல்வேலி ‘மாவட்ட அறிவியல் மைய வளாகத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
திருநெல்வேலி ‘மாவட்ட அறிவியல் மைய வளாகத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மகேந்திரகிரி திரவ உந்தும வளாகம் சாா்பில் அக்.4 ஆம் தேதி முதல் அக்.10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு கன்னியாகுமரி,திருநெல்வேலி,தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சோ்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, விநாடி வினா, கட்டுரைப்போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அக்.26, 27 ஆகிய தேதிகளில் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறும் என அறிவித்திருந்தனா்.
அதன்படி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பை சோ்ந்த மாணவ,மாணவியா்களுக்கு அக்.26 ஆம் தேதி மாவட்ட அறிவியல் மையத்தில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. அக்.27 ஆம் தேதி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு ஓவியப்போட்டி விண்வெளி சுற்றுலா என்ற தலைப்பிலும், 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு விநாடி, வினா போட்டி விண்வெளி மற்றும் நிலைத்தன்மை என்ற தலைப்பிலும் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவ,மாணவிகள் பங்கேற்றனா்.