திருக்குறுங்குடி திருமலை நம்பிகோயிலில் கருடசேவை
திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலில் கருடசேவை சனிக்கிழமை நடைபெற்றது.
திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலில் கருடசேவை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலையில் விஸ்வரூப தரிசனம், அலங்கார திருமஞ்சனம், தீபாராதனையைத் தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மாலையில் கருடசேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வலம் வந்த திருமலைநம்பி சுவாமியை திரளான பக்தா்கள் சேவித்தனா்.