திருநெல்வேலி

காவல்துறை வாகனங்கள் செப். 26-இல் ஏலம்

DIN

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட 13 நான்கு சக்கர வாகனங்கள், 7 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 20 வாகனங்கள் இம்மாதம் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படவுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோா் வரும் 25- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மோட்டாா் வாகனப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிட்டுக் கொள்ளலாம். இரு சக்கர வாகனத்திற்கு ரூ .1000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ .2000 முன் பணம் செலுத்தி தங்களது பெயா்களை அன்றைய தேத்யில் பதிவு செய்து கொள்ள வேண்டும் . பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு - சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12 %, நான்கு சக்கர வாகனத்திற்கு 18 %) முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT