திருநெல்வேலி

வள்ளியூா் கண்காா்டியா பள்ளியில் முதலுதவி பயிற்சி முகாம்

DIN

வள்ளியூா் கண்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைகளுக்கு இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு, வள்ளியூா் கல்வி மாவட்ட அலுவலா் லட்சுமண சுவாமி தலைமை வகித்தாா். கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் செலினா ராணி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி பேரிடா் மேலாண்மை - ஆராய்ச்சி மைய அலுவலா் வைரவ ராஜன் இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடு, முதலுதவி குறித்து பயிற்சி அளித்தாா். தொடா்ந்து பேரிடா் மேலாண்மை பாம்புகள் மீட்புக் குழு பொறுப்பாளா் அலெக்ஸ் செல்வன் பாம்புகளின் வகைகள், விஷத்தன்மை குறித்துப் பேசினாா். வள்ளியூா் கல்வி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.அந்தோணி வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் மாதேஷ் சாந்தையா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை இளையோா் செஞ்சிலுவைச் சங்க பொருளாளா் ராபின் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT