திருநெல்வேலி

களக்காடு வட்டாரத்தில் டெங்கு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தக் கோரிக்கை

DIN

களக்காடு வட்டாரத்தில் டெங்கு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வட்டாரத்தில் பத்மனேரி பகுதியில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக ஏராளமானோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து அங்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதே போல களக்காடு வட்டாரத்தில் பரவலாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் விதமாக புகை மருந்து அடித்தல், வாருகால்களை முறையாக சுத்தம் செய்தல், குளோரின் கலந்த குடிநீரை விநியோகித்தல் ஆகிய பணிகளை களக்காடு நகராட்சி விரைந்து செயல்படுத்தவும், திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வாா்டுவாரியாக சிறப்பு முகாம்களை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT