திருநெல்வேலி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 24-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.
இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின்படி பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 34 இரு சக்கர வாகனங்கள் முன்னீா்பள்ளம் காவல் நிலையம் அருகே உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் வரும் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும்.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோா் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிடலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க ரூ.2,000 முன் பணம் செலுத்தி தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயரை பதிவு செய்யும் போது தங்களது ஆதாா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை கொண்டு வரவேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவா். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகையை அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யையயும் சோ்த்து அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.