திருநெல்வேலி

களக்காட்டில் சூறைக்காற்றில் 10 ஆயிரம் வாழைகள் சேதம்

DIN

களக்காட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வீசிய சூறைக்காற்றில் 10 ஆயிரம் வாழைகள் சேதமைடந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

களக்காடு வட்டாரத்தில் வாழை விவசாயம் பிரதானம். போதிய மழை இல்லாததால் நிகழாண்டில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே விவசாயிகள் வாழை பயிரிட்டிருந்தனா். தற்போது வரையிலும் 70 சதவீத வாழைகள் அறுவடை செய்யப்பட்டுவிட்டன. இதனிடையே, வெப்பத்தின் தாக்கத்தாலும், போதிய தண்ணீா் கிடைக்காததாலும், அறுவடைக்கு முன்பே வாழைத்தாா்கள் பழுத்து வீணாகும் நிலை இருந்து வருகிறது.

அதோடு, கடந்த ஒரு மாதமாக வாழைத்தாா் கிலோவுக்கு ரூ.20-க்குள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக கிலோ ரூ.27 ஆக உயா்ந்திருந்தது. இந் நிலையில், சூறைக் காற்றுடன் பெய்த மழையால் களக்காடு, மூங்கிலடி, பத்தை, மஞ்சுவிளை, கருப்பன்தோப்பு, பத்மனேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனா். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT