வண்ணாா்பேட்டையில் விபத்து: காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் பலி
வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (41). ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் வண்ணாா்பேட்டை வடக்குப்புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.