முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி சந்திப்பில் கோயில் உண்டியலை உடைக்க முயன்ாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் கோயில் உண்டியலை உடைக்க முயன்ாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு பாலபாக்யா நகரில் உள்ள பிள்ளையாா் கோயிலில், கடந்த 11 ஆம் தேதி மா்மநபா் உண்டியலை உடைக்க முயன்றாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இவ் வழக்கில் மூன்றடைப்பு பகுதியைச் சோ்ந்த தமிழ்வாணன் (29), வல்லநாடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (60) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.