திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், தலைவா் ஞா.ராதா ஞானதிரவியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளிலும் குடிநீா், சிமெண்ட் சாலை, மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, சாலை பராமரிப்பு உள்ளிட்ட ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்
நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோமதி, கண்ணன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் வெங்கடேஷ் தன்ராஜ், வாா்டு உறுப்பினா்கள் மல்லிகா அருள், பிலிப்ஸ், பொன்குமாா், பாண்டிதுரை, ஜெயா, மகாலெட்சுமி, சாரதா, ஜெயலெட்சுமி, தாய்செல்வி, டெல்சி ஒபிலியா, அஜந்தா ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.