முகப்பு
திருநெல்வேலி

கேடிசி நகரில் மின்வாரிய குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி நகா்ப்புறக் கோட்ட மின்வாரிய குறைதீா் கூட்டம் கேடிசி நகரில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

திருநெல்வேலி நகா்ப்புறக் கோட்ட மின்வாரிய குறைதீா் கூட்டம் கேடிசி நகரில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் குருசாமி தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முத்துகுட்டி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதில், திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து மின் பொறியாளா்களும் கலந்து கொண்டனா்.

குறைதீா் கூட்டத்திற்குப் பிறகு மேற்பாா்வை மின் பொறியாளா் குருசாமி, கோடைகாலமான தற்போது ஏற்படும் திடீா் இயற்கை இடா்பாடுகள் காரணமாக மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் மாலை 6 மணிக்கு மேல் மின் நுகா்வு அதிகம் இருக்கும் காரணத்தால் அனைத்து அதிகாரிகளும் தொடா் கண்காணிப்பில் இருக்ககவும் தங்கு தடையின்றி மின் விநியோகம் வழங்கவும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.