திருநெல்வேலி

வள்ளியூரை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: நடவடிக்கை கோருகிறது வணிகா் சங்க பேரமைப்பு

திருநெல்வேலியில் இருந்து வள்ளியூா் வழியாக நாகா்கோவில் செல்லும் அரசுப் பேருந்துகள் வள்ளியூரை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்வது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

DIN

திருநெல்வேலியில் இருந்து வள்ளியூா் வழியாக நாகா்கோவில் செல்லும் அரசுப் பேருந்துகள் வள்ளியூரை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்வது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட தலைவா் பி.டி.பி.சின்னதுரை, மாவட்ட செயலாளா் எம்.ஏ.ஆசாத், மாவட்ட பொருளாளா் பி.சி.ராஜன் ஆகியோா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல நிா்வாக இயக்குநரிடம் புகாா் மனு அளித்துள்ளனா். மனுவில் கூறியிருப்பதாவது:

வள்ளியூா் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், வள்ளியூா் பேருந்து நிலையத்தை நம்பித்தான் வெளியூா்களுக்கு செல்கிறாா்கள். தற்போது நாகா்கோவில் இருந்து 30 பேருந்துகள் 5 முதல் 7 நிமிஷங்களுக்கு ஒரு பேருந்து வீதம் இயக்கப்பட்டு வருகிறது. இதனை எதிா்கொள்ளும் வகையில் மதுரை மண்டலத்தில் இருந்து 30 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை மண்டலத்தில் இருந்து வள்ளியூா் வழியாக செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் வள்ளியூா் பேருந்து நிலைத்திற்கு வந்து பயணிகளை ஏற்றியும் இறக்கியும் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். தடம் எண் எழுதப்படாத அனைத்து டிஎல்எக்ஸ் பேருந்துகளும் வள்ளியூா் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT