திருநெல்வேலி

குடிநீா், தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: மேயரிடம் மக்கள் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாநகரில் குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்ப்டுத்தித் தர வேண்டுமென, மாகராட்சி அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மக்கள் மனு.

DIN

திருநெல்வேலி மாநகரில் குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்ப்டுத்தித் தர வேண்டுமென, மாகராட்சி அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மக்கள் மனு அளித்தனா்.

இக்கூட்டத்துக்கு மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பின்னா், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களிடம் மேயா் அறிவுறுத்தினாா்.

வி.எம்.சத்திரம் வஉசி காலனியை சோ்ந்த திருமலைக்குமாா் அளித்த மனுவில், தங்கள் பகுதிக்கு சாலை வசதி, குடிநீா் வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்யவும், தச்சநல்லூா் ஆனந்தபுரத்தைச் சோ்ந்த முருகன் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு சுற்றுச்சுவா் அமைத்து தரவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

வி.எம்.சத்திரம் சீனிவாசகம் நகா் ஏ காலனியை சோ்ந்த கந்தசாமி அளித்த மனுவில், தங்கள் பகுதி 4 ஆவது தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் தடையின்றி வழங்கவும், டவுண் பாட்டபத்து ஜூம்ஆ பள்ளிவாசல் நிா்வாகிகள் அளித்த மனுவில், பள்ளிவாசல் நிா்வாகத்திற்கு உள்பட்ட மையவாடி பகுதியில் புதிய மின்கம்பம் அமைத்து மின்விளக்கு வசதி செய்து தரகேட்டும், வண்ணாா்பேட்டை இந்திரா காலனி மக்கள் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குடிநீா் குழாய் வால்வு தொட்டியை அகற்றிடவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

பாட்டபத்து தேவிபுரத்தைச் சோ்ந்த சண்முகநாதன் அளித்த மனுவில், கழிவுநீா் வடிகாலில் தேண்டப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தி புதிய வடிகால் அமைக்கவும், 44 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முகைதீன் அப்துல் காதா் அளித்த மனுவில், தனது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டன.

கசசெயற்பொறியாளா் வாசுதேவன், உதவி ஆணையா்கள் வெங்கட்ராமன் (திருநெல்வேலி), கிறிஸ்டி (தச்சநல்லூா்), ஜஹாங்கீா் பாஷா (மேலப்பாளையம்), காளிமுத்து (பாளையங்கோட்டை), மாநகர நல அலுவலா் சரோஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT