மே தினம்: மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு திங்கள்கிழமை (மே 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு திங்கள்கிழமை (மே 1) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மே 1ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என்றாா்.