நெல்லையில் 10 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருநெல்வேலியில் 10 மணி நேரங்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருநெல்வேலியில் 10 மணி நேரங்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருநெல்வேலியில் சனிக்கிழமை காலையில் இருந்து மேகமாக இருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை, பகல் 1 மணி வரை தொடர்ந்து பெய்து வருகிறது
திருநெல்வேலி சந்திப்பு, நகரம், பாளையங்கோட்டை, கேடிசி நகர், பெருமாள்புரம், புதிய பேருந்து நிலையம் , மேலப்பாளையம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்ந்தது.
குறிப்பாக வண்ணார்பேட்டை இஸ்கான் கோயில், வஉசி மைதானம், சந்திப்பு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாளையங்கோட்டை , திருச்செந்தூர் சாலை ஆகியவற்றில் குண்டும் - குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.