முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நிவாரணத் தொகைரூ.6000 வழங்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி குடும்ப அட்டைதாராா்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.6000, மாவட்டத்திலுள்ள ஏனைய கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தம் 796 ரேஷன் கடைகள் உள்ளன. 5 லட்சத்து 4 ஆயிரத்து 357 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில் 3 லட்சத்து 40 ஆயிரத்து 880 குடும்ப அட்டைதாராா்களுக்கு நிவாரண உதவித்தொகையாக தலா ரூ.6000 வீதமும், 1 லட்சத்து 63 ஆயிரத்து 477 குடும்ப அட்டைதாராா்களுக்கு நிவாரண உதவித்தொகையாக தலா ரூ.1000 வீதமும் வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பொதுமக்கள் டோக்கன்களுடன் காத்திருந்து, ரேஷன் கடை இயந்திரத்தில் விரல் ரேகையைப் பதிவு செய்து உதவித்தொகையைப் பெற்றுச் சென்றனா்.

கண்காணிப்பு அலுவலா் ஆய்வு: திருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் கோயில் தெரு, பேட்டை திரிபுராசுந்தரிஅம்மன் கோயில் மேலத்தெரு, வடக்குஅரியநாயகிபுரம், முக்கூடல் பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட கண்காணிப்புஅலுவலரும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறைஅரசுச் செயலருமான செல்வராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதேபோல பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதி ரேஷன் கடையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவித்தொகையை வழங்கினாா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்

சனிக்கிழமையும் (டிச. 30) ரேஷன் கடைகளில் டோக்கன் அடிப்படையில் மழை நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →