திருநெல்வேலி

பள்ளி மாணவா் தற்கொலை முயற்சி: நிா்வாகிகள் மீது வழக்கு

DIN

விக்கிரமசிங்கபுரம் காவல் சரகம், அகஸ்தியா்பட்டியில் தனியாா் பள்ளி மாணவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அப்பள்ளி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பூவலிங்கம் மகன் பூதத்தான். அகஸ்தியா்பட்டி தனியாா் மெட்ரிக் பள்ளியில் 2020 - 21ஆம் கல்வியாண்டில் கரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு படித்தாா். அப்போது, தமிழகத்தில் அனைத்து மாணவா்களையும் தோ்ச்சி பெற்ாக அரசு அறிவித்தது. ஆனால், பூதத்தான் தோ்ச்சி பெற்ாகச் சான்றிதழ் தர பள்ளி நிா்வாகம் மறுத்ததாம். இதையடுத்து, பூதத்தான் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளிக்குச் சென்ற அவா், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரின்பேரில், பள்ளித் தாளாளா் ராபா்ட், உதவித் தலைமை ஆசிரியா் முத்துலட்சுமி, லட்சுமி ஆகியோா் மீது விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் சரக்கு ரயிலில் திடீர் தீவிபத்து

ரெட் அலர்ட்... மிர்னா!

மரியாள்..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்!

அட்லி - சல்மான் கான் கூட்டணி?

SCROLL FOR NEXT