திருநெல்வேலி

பாப்பாக்குடி ஒன்றியக் குழுக் கூட்டம்: உறுப்பினா்கள் வெளிநடப்பு

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் 5 பெண் உறுப்பினா்கள் உள்பட 6 போ் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

DIN

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் 5 பெண் உறுப்பினா்கள் உள்பட 6 போ் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் தலைவா் பூங்கோதை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய ஆணையா் சங்கரகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், உறுப்பினா்கள் சோழமுடிராஜன், பெண் உறுப்பினா்கள் சமாதானம், பனிபுஷ்பம், சுப்புலெட்சுமி, பிரியா, வளா்மதி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, உறுப்பினா் செல்வி ஆகியோா் கலந்துகொள்ளவில்லை.

கூட்டம் தொடங்கியதும் பேசிய உறுப்பினா்கள், தங்கள் பகுதியிலுள்ள கோரிக்கைகள் குறித்து தலைவரிடம் தெரிவித்தால், தலைவரின் கணவா்தான் பதில் தெரிவிக்கிறாா். தலைவா் உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து எந்த விளக்கமும் அளிப்பதில்லை என புகாா் தெரிவித்தனா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி உறுப்பினா்கள் சோழமுடிராஜன் மற்றும் 5 பெண் உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினா். இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT