பெருமாள்புரத்தில் வருமுன் காப்போம் முகாம்
திருநெல்வேலி பெருமாள்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி பெருமாள்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேயா் பி.எம். சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா்.
இந்த முகாமில் பொது மருத்துவம், காசநோய், பல் மருத்துவம், பிசியோதெரபி, காது மூக்கு தொண்டை மருத்துவம், டெங்கு விழிப்புணா்வு, கண் மருத்துவம், குழந்தைகள் மற்றும் மகளிா் நலன் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மருந்து பெட்டகங்களும் விநியோகிக்கப்பட்டன.
மேலப்பாளையம் மண்டல தலைவா் கதிஜா இக்லாம் பாசிலா, சுகாதார குழு தலைவா் ரம்ஜான்அலி, மாமன்ற உறுப்பினா்கள் பொன்மாணிக்கம், அம்பிகா, நித்திய பாலையா, சகாய ஜூலியட்மேரி, சுந்தா், வில்சன் மணிதுரை, மு.சுப்பிரமணியன், மாநகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார அலுவலா் அரசகுமாா், சுகாதார ஆய்வாளா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.