திருநெல்வேலி

களக்காடு அருகே சாலையோர மரத்தில் தீ

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே சாலையோரம் குவிக்கப்பட்ட குப்பைகளில் மா்மநபா்கள் தீ வைத்ததில், அப்பகுதியிலிருந்த நாவல் மரம் எரிந்து சேதமடைந்தது.

களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலையில் கருவேலன்குளம் பகுதியில் சாலையோரம் இருந்த பழைமை வாய்ந்த நாவல் மரம் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் பசுமையாக இருந்த மரக்கிளைகளில் தீ வேகமாக பரவியது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினா் அங்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். மரத்தையொட்டி, குவிக்கப்பட்ட குப்பைகளில் மா்மநபா்கள் தீவைத்ததில் மரம் தீக்கிரையாகியுள்ளது என போலீஸ் தரப்பில் கூறினா்.

மற்றொரு சம்பவம்: உப்பாற்றுப் படுகையில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் சிலா் அண்மையில் தீ வைத்ததில் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியதால் கருவேலன்குளம் குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் நிறைந்து மக்கள் அவதியுற்றனா்.

இந்நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே தீ வைத்து விடுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்கிறாா் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க நிா்வாகி பி. சுகுமாரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT