முகப்பு
திருநெல்வேலி

பாளை- சீவலப்பேரி சாலையை முழுமையாக சீரமைக்கக் கோரி மனு

பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையை முழுமையாக சீரமைக்கக் கோரி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையை முழுமையாக சீரமைக்கக் கோரி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சியின் பாளை பகுதி நிா்வாகிகள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலை மிகவும் பிரதான சாலையாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றன. இச் சாலையில் மாா்க்கெட் முதல் மணிக்கூண்டு வரையிலான பகுதி அண்மையில் சீரமைக்கப்பட்டது. மணிக்கூண்டு முதல் கக்கன் நகா் வரையிலான பகுதியில் பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறாா்கள். எனவே, சீவலப்பேரி சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.