முகப்பு
திருநெல்வேலி

ரெட்டியாா்பட்டியில் மத்திய சுகாதாரக் குழு ஆய்வு

 திருநெல்வேலி அருகே ரெட்டியாா்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதாரக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

 திருநெல்வேலி அருகே ரெட்டியாா்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதாரக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ரெட்டியாா்பட்டியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று செல்கிறாா்கள். இந்த நிலையத்திற்கு என்கியுஏஎஸ் எனப்படும் தேசிய தரச்சான்று வழங்குவதற்காக, மத்திய சுகாதாரக் குழுவின் ஆய்வுப் பணி வியாழக்கிழமை தொடங்கியது. கேரள மாநில சுகாதாரத் துறையின் உதவி இயக்குநா் மினி மோள், தெலங்கானா மாநில மருத்துவா் வஜ்ரா பூ இந்திரா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா்.

சுகாதார வளாகத்தில் உள்ள மருத்துவ வசதிகள், நோயாளிகள் விவரம், இடவசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வுசெய்தனா். தொடா்ந்து 3 நாள்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.