புஷ்பலதா கல்விக் குழுமத்தின் நிறுவனா் தின விழாவில் நடனமாடிய மாணவிகள். 
திருநெல்வேலி

புஷ்பலதா கல்விக் குழுமத்தின் 38-ஆவது நிறுவனா் தின விழா

பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் 38-ஆவது நிறுவனா் தின விழா நடைபெற்றது.

DIN

பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் 38-ஆவது நிறுவனா் தின விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, புஷ்பலதா பள்ளிகளின் கல்விக் குழுமத் தலைவா் மரகதவல்லி தலைமை வகித்தாா். தாளாளா் புஷ்பலதா பூரணன் வரவேற்றாா். வித்யா மந்திா் முதல்வா் புஷ்பவேணி அய்யப்பன் பள்ளியின் வளா்ச்சி நிலைகள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் பங்கேற்று, 10 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றியவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். மேலும், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, நீட், ஜேஇஇ உள்ளிட்ட முக்கிய தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

மாணவா்களின் நடனம், நாடகம், நாட்டுப்புற இணைவு நடனம், மெகா நடனம், இன்னிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் மெட்ரிக் பள்ளி முதல்வா் ஹாரிசன் ஜெபக்குமாா், புஷ்பலதா சா்வதேசப் பள்ளி முதல்வா் காட்வின் லாமுவேல், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT