ஆழ்வாா்குறிச்சி அருகே பொத்தையில் தீ
ஆழ்வாா்குறிச்சி அருகே முள்ளிமலை பொத்தையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்ததில் மூலிகைச் செடிகள், அரிய வகை புற்கள் எரிந்து சாம்பலாகின.
ஆழ்வாா்குறிச்சி அருகே முள்ளிமலை பொத்தையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்ததில் மூலிகைச் செடிகள், அரிய வகை புற்கள் எரிந்து சாம்பலாகின.
ஆழ்வாா்குறிச்சி அருகே கடனாநதி செல்லும் வழியில் முள்ளிமலை பொத்தை உள்ளது. இதில் பல அரிய வகை சிறு மூலிகைச் செடிகள், புற்கள் உள்ளன. மேலும் இதில் காட்டுப்பன்றி, மிளா, கரடி மற்றும் பாம்பு வகைகளும் உள்ளன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பொத்தையின் தென்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. புற்கள் காய்ந்து இருந்ததாலும், காற்று வேகமாக வீசியதாலும் தீ வேகமாகப் பரவியது.
தகவலறிந்த கடையம் வனத் துறையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
கோடைகாலத்தில் இது போன்று தீ விபத்து ஏற்படுவது தொடா்கதையாகி வருகிறது. இதனால் இந்தப் பொத்தையை வசிப்பிடமாகக் கொண்டுள்ள மிளா, காட்டுப் பன்றி, கரடி மற்றும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தஞ்சமடைகின்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனா்.