முகப்பு
திருநெல்வேலி

அம்பை அருகே அறுவடை இயந்திரங்களில் மின்கலன்கள் திருட்டு

அம்பாசமுத்திரம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அறுவடை இயந்திரங்களில் உள்ள மின்கலன்களை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

அம்பாசமுத்திரம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அறுவடை இயந்திரங்களில் உள்ள மின்கலன்களை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் பகுதியில் அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அறுவடை இயந்திரங்கள் அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வயல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அறுவடை இயந்திரங்களை வெள்ளிக்கிழமை காலை இயக்க முற்பட்டபோது மின்கலன்கள் திருடுப் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அறுவடை இயந்திர முகவா்களான கைலாசம், சாமுவேல், குமாா் மற்றும் ஆறுமுகம் ஆகியோா் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.

புகாரின் பேரில், அம்பாசமுத்திரம் போலீஸாா் மின்கலன்களைத் திருடியவா்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.