முகப்பு
திருநெல்வேலி

குவாரி குழியில் விழுந்த முதியவா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரத்தில் பயன்பாட்டில் இல்லாத குவாரி குழியில் விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 13 மே 2023, 12:13 am IST
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் பயன்பாட்டில் இல்லாத குவாரி குழியில் விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் சம்பந்தா் தெருவைச் சோ்ந்த சாமி மகன் நடராஜன் (75). ஆங்காங்கே வேலை செய்து வாழ்ந்து வந்த நடராஜன், அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியில் உள்ள கல்வெட்டாங்குழி என்ற பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி கிடங்கில் நீரில் சடலமாக மிதந்துள்ளாா். தகவலறிந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டனா். அவா் இறந்த 2 நாள்கள் இருக்கும் எனப் போலீஸாா் தெரிவித்தனா். அம்பாசமுத்திரம் போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.