பாளையங்கோட்டையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன். 
திருநெல்வேலி

தனியாா் பள்ளி வாகனங்களில் ஆய்வு தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. பள்ளி வளாகங்களில் சீரமைப்புப் பணி, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான பராமரிப்புப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்ஒரு பகுதியாக, தனியாா் பள்ளிகளின் வாகனங்களின் வசதிகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தனியாா் சுமாா் 250-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

அந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை, ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தொடக்கிவைத்து கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 135 னியாா் பள்ளிகளின் கீழ் 1,011 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் உள்ள வசதிகள், சரி செய்ய வேண்டிய குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, தீயணைப்பு துறையின் சாா்பில் பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. ஆய்வின்போது, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருப்பதி, வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ராஜசேகா், பெருமாள், பிரபாகரன், தீயணைப்பு அலுவலா் வெட்டும்பெருமாள், மாவட்ட கல்வி அலுவலா்கள் ரமாவதி, சுப்புலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT