திருநெல்வேலி

நகரம் பிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்வாக நகரின் எல்லையில் உள்ள காவல் தெய்வங்களில் ஒன்றான அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கொடிப்பட்டம் ஊா் சுற்றி எடுத்துவரப்பட்டு கொடிமரத்தின் முன்வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தயிா் இளநீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், கொடியேற்றம் முடிந்ததும் மகாதீபாராதனை நடைபெற்றது.

இதில், திருநெல்வேலி நகரம், சாலியா்தெரு, ராஜாஜிபுரம், கண்டிகைப்பேரி சுற்றுவட்டார பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT