திருநெல்வேலி சந்திப்பில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா். 
திருநெல்வேலி

பெரியாா், அண்ணா சிலைகளுக்கு திமுகவினா் மாலை அணிவிப்பு

திருநெல்வேலியில் பெரியாா், அண்ணா சிலைகளுக்கு திமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

DIN

திருநெல்வேலியில் பெரியாா், அண்ணா சிலைகளுக்கு திமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி மத்திய மாவட்டதிமுக பொறுப்பாளராக முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து அவா், சென்னை சென்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா். தொடா்ந்து புதன்கிழமை திருநெல்வேலிக்கு வந்த டி.பி.எம்.மைதீன்கானுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பாளையங்கோட்டையில் உள்ள பெரியாா் சிலை, திருநெல்வேலி சந்திப்பு , மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலா் சுப்பிரமணியன், மேயா் பி.எம்.சரவணன், முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், நெசவாளா் அணி மாநில அமைப்பாளா் சொ.பெருமாள், மாமன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT