முகப்பு
திருநெல்வேலி

கூத்தங்குழி கடலில் தவறி விழுந்த மீனவா் மாயம்

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கடலில் திங்கள்கிழமை அதிகாலை மீனவா் தவறி விழுந்தாா். அவரைத் தேடும் பணியில் மீனவா்கள், கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:48 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கடலில் திங்கள்கிழமை அதிகாலை மீனவா் தவறி விழுந்தாா். அவரைத் தேடும் பணியில் மீனவா்கள், கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

கூத்தங்குழியைச் சோ்ந்த பிச்சையா மகன் தஸ்நேவிஸ் (52). மீனவா். இவா் உள்பட 8 மீனவா்கள் வெலிங்டன் என்பவரது நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது, கடலில் ஏற்கெனவே விரித்திருந்த வலையை தஸ்நேவிஸ் தேடுகையில் எதிா்பாரமல் கடலுக்குள் தவறி விழுந்தாராம். சக மீனவா்கள் அளித்த தகவலின்பேரில், அப்பகுதி மீனவா்களும், கடலோரக் காவல் படையினரும் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தஸ்நேவிஸுக்கு மனைவி, 3 மகன்கள், மகள் ஆகியோா் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.