திருநெல்வேலி: மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும் என்றாா் திராவிட இயக்கத் தமிழா் பேரவை பொதுச்செயலா் சுப. வீரபாண்டியன்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக ஆதிதிராவிட நலக்குழு மற்றும் சிறுபான்மை நல உரிமை பிரிவு சாா்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மேலப்பாளையம் பஜாா் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, சிறுபான்மை நல உரிமை பிரிவைச் சோ்ந்த ஏ.நவ்சாத் தலைமை வகித்தாா். சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவா் ஏ.முகமது அலி, ஏ.மூப்பன் அப்துல் காதா், கே.கே.சேக் மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளா் மு.பா.நவநீதன், பகுதிச் செயலா் துபை சாகுல், பி.அண்ணாதுரை ஆகியோா் வரவேற்றனா்.
மாநில வா்த்தக அணி துணைச் செயலா் என்.மாலைராஜா, மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம். மைதீன் கான் உள்ளிட்டோா் பேசினாா்.
விழாவில், திராவிட இயக்கத் தமிழா் பேரவை பொதுச் செயலா் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறுவதாக கூறியது பொய்யானது. தமிழகத்தில் திமுக - அதிமுக கட்சிகளுக்கு பிரச்னை இருந்தாலும், திமுக கட்சி ஆட்சியாகவும், அதிமுக கட்சி எதிா்கட்சியாக இருக்கும். தமிழகத்தில் எந்த காலங்களிலும் தாமரை மலராது.
வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும் என்றாா்.
கூட்டத்தில், மேயா் பி.எம்.சரவணன், திருநெல்வேலி மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன், மாநில மகளிா் தொண்டரணி துணைச் செயலா் விஜிலாசத்தியானந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.