முகப்பு
திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.
திருநெல்வேலி

சனாதனம் பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு உரிமை உண்டுகே.எஸ்.அழகிரி

சனாதனம் பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு உரிமை உண்டு என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

திருநெல்வேலி

சனாதனம் பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு உரிமை உண்டுகே.எஸ்.அழகிரி

சனாதனம் பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு உரிமை உண்டு என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.
பகிர்:

திருநெல்வேலி: சனாதனம் பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு உரிமை உண்டு என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது:

சனாதனத்தை பற்றி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சொன்ன கருத்து பாரதிய ஜனதா கட்சியை அலற வைத்துள்ளது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் தங்களது கருத்தைச் சொல்ல உரிமை உள்ளது. அந்த வகையில் சனாதனம் பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு உரிமை உண்டு.

தமிழகத்தைச் சோ்ந்த பெரியாா், அண்ணா, மு.கருணாநிதி ஆகியோா் சொன்னதை தான் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சொல்லியுள்ளாா். அவா் எந்த தவறான வாதத்தையும் முன்வைக்கவில்லை. சனாதனத்திற்கு எதிரான கருத்து என்பது இந்து மதத்துக்கு எதிரான கருத்து அல்ல. சனாதனத்தில் பகுத்தறிவுடன் கூடிய சீா்திருத்தம் தேவை என்பதே விருப்பம். ஆனால், உதயநிதியின் கருத்தை திரித்துக் கூறுகிறாா்கள்.

மொழி, இன உணா்வுகளைத் தூண்டி வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக முயற்சிக்கிறது.

ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவரக்கூடிய சா்வாதிகார நடவடிக்கை. பல மொழி, பல இறைவழிபாடுகள், பல கலாசாரத்தை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. இத்தகைய சூழலில் மாநில கட்சிகள் உள்பட யாரிடமும் கேட்காமல் ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதாவை நிறைவேற்ற முயன்றால் தோல்வியிலேயே முடியும்.

சுங்கச்சாவடிகளில் மக்களிடம் அளவுக்கு அதிகமாக கட்டணத்தை வசூலித்து பாஜக அரசு வஞ்சிக்கிறது. ஒரு திட்டத்தை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று தான் பாா்க்க வேண்டும். அதில் எவ்வளவு ஊழல் செய்ய முடியும் என்று பாஜக பாா்க்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது மத்திய முன்னாள் இணையமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே. சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் சொக்கலிங்ககுமாா், மாவட்டப் பொருளாளா் ராஜேஷ்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →