திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

Din

ராதாபுரம் தொகுதியில் தோ்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய தோ்தல் விறுவிறுப்பாக நடந்தது. வெயில் வெப்பத்தை கருத்தில் கொண்டு நண்பகல் நேரத்தில் வாக்குப் பதிவு மந்தமாக காணப்பட்டது. மாலையில் மீண்டும் விருவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

ராதாபுரம் தொகுதியில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் சிறு, சிறு பழுது ஏற்பட்டு சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. அதுவும் உடனடியாக சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்றது.

வள்ளியூா் அருகே உள்ள ஏா்வாடி கோயில் வாசல் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி 114 மற்றும் 116 ஆகிய இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்கவில்லை. பின்னா் மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால் 2 மணிநேரம் வாக்குப் பதிவு தாமதமானது.

இந்நிலையில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டு வந்திருந்த அனைவரையும் வாக்களிக்க அனுமதித்தனா்.

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT