ஆடிப் பெருக்கை முன்னிட்டு அம்பாசமுத்திரம் தாமிரவருணிஆற்றங்கரையில் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
ஆடி 18ஆம் நாள் நீா் நிலைகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபடுவது வழக்கம். இதையடுத்து சனிக்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்பாசமுத்திரம் காசிநாத சாமி கோயில் தாமிரவருணிபடித்துறையில் புதுமணப் பெண்கள் 18 வகை பலகாரங்கள் செய்து தாலிப் பெருக்கி கட்டி வழிபட்டனா்.
மேலும், தாமிரவருணி நதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆரத்தி வழிபாடு நடைபெற்ற்றது.நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.