திருநெல்வேலி

மேலப்பாளையம் மண்டலத்தில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

Din

மேலப்பாளையம் மண்டலத்தில் 31-ஆவது வாா்டு, 40 முதல் 54 வரை உள்ள வாா்டுகளில் வியாழக்கிழமை (ஆக.29) குடிநீா் விநியோகிக்கப்படாது.

இது தொடா்பாக மேலப்பாளையம் மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 31-ஆவது வாா்டு, 40 முதல் 54 வரை உள்ள வாா்டு பகுதிகளுக்கு அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான நீரேற்றத்தில் குறுக்குத்துறை ரயில்வே கேட் அருகில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்படி வாா்டு பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் போதுமான குடிநீா் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நீரேற்ற பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்யயும் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட வாா்டு பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஆக.29) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

தீயவர் குலை நடுங்க வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT