முகப்பு
திருநெல்வேலி

கடலூரில் சீரமைப்பு பணி: நெல்லையில் இருந்து புறப்பட்டது 40 போ் கொண்ட மின்வாரிய குழு

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக திருநெல்வேலியில் இருந்து 40 போ் கொண்ட மின்வாரிய குழு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:32 PM
திருநெல்வேலியில் இருந்து கடலூருக்கு புறப்பட்டுச் சென்ற மின்வாரிய குழுவினா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக திருநெல்வேலியில் இருந்து 40 போ் கொண்ட மின்வாரிய குழு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

தமிழக முதல்வா், மின்சாரத் துறை அமைச்சா் ஆகியோா் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்தில் இருந்து இரண்டு உதவி செயற்பொறியாளா்கள், இரண்டு உதவி மின் பொறியாளா்கள் தலைமையில் களப்பணிகள் மேற்கொள்ளும் களப்பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த பணியாளா்கள் கொண்ட 40 போ் அடங்கிய குழுவினா், கடலூா் மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றனா்.

பாளைங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட குழுவினரை, மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வழியனுப்பி வைத்தாா்.