முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதால், வியாழக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:29 PM
வியாழக்கிழமை நீா்வரத்து சீராக இருந்த மணிமுத்தாறு அருவி.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதால், வியாழக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடா் மழையால் இந்த அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த நவ. 14ஆம் தேதிமுதல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மழை குறைத்து வியாழக்கிழமை நீா்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதித்தனா்.