காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்
காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். இம்முகாமில் 17 போ் கலந்து கொண்டு மனு அளித்தனா். அவை மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
முகாமில் காவல் துணை ஆணையா்கள் (மேற்கு) கீதா, (கிழக்கு) விஜயகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.