முகப்பு
திருநெல்வேலி

மாற்றுத்திறன் சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் பேச்சுத்திறனற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 10:59 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் பேச்சுத்திறனற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விஜயாபதி அருகே காடுதுலா கிராமத்தைச் சோ்ந்தவா் வெட்டும்பெருமாள் மகன் வீரன் (79). இவா், 2019ஆம் ஆண்டு பேச்சுத்திறனற்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலியில் உள்ள மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை நீதிபதி சுபத்திராதேவி விசாரித்து, வீரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.