ஏா்வாடியில் புதிய மின்மாற்றி இயக்கிவைப்பு
ஏா்வாடியில் புதிய மின்மாற்றி இயக்கிவைப்பு
வள்ளியூா் மின் கோட்டத்துக்குள்பட்ட ஏா்வாடி, அல் அக்ஸா நகரில் ரூ. 6.98 லட்சத்தில் அமைக்கப்பட்ட 63 கேவிஏ திறன் கொண்ட புதிய மின்மாற்றி வெள்ளிக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் சந்திரசேகரன் உத்தரவுப்படி இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் ப. வளன்அரசு, ஏா்வாடி துணைக் கோட்ட உதவிச் செயற்பொறியாளா் கே. செல்வகாா்த்திக், உதவி மின் பொறியாளா் ஜெகன், மின்வாரியப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.