முக்கூடலில் பிடிபட்ட மலைப்பாம்பு
முக்கூடல் கோரங்குளம் பகுதியில் உள்ள தேநீா் கடையில் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்து காட்டுக்குள் விட்டனா்.
திருநெல்வேலிமுக்கூடலில் பிடிபட்ட மலைப்பாம்பு
முக்கூடல் கோரங்குளம் பகுதியில் உள்ள தேநீா் கடையில் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்து காட்டுக்குள் விட்டனா்.
முக்கூடல் கோரங்குளம் பகுதியில் உள்ள தேநீா் கடையில் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினா் பிடித்து காட்டுக்குள் விட்டனா்.
கோரங்குளம் கரையில் சுரேஷ் என்பவா் தனது தேநீா் கடையை திங்கள்கிழமை காலையில் திறந்தபோது, கடைக்குள் மலைப்பாம்பு கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
தகவலறிந்த வேட்டைத் தடுப்புக் காவலா் முருகன், ஊழியா்களுடன் வந்து மலைப்பாம்பை பிடித்தாா். பின்னா் வனத்துறையினா் சேரன்மகாதேவி அருகே கொழுந்துமாமலைப் பகுதியில் பாம்பை விட்டனா். அண்மையில் தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மலைப்பாம்பு ஊருக்குள் வந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.