முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பெண் சடலம் மீட்பு

திருநெல்வேலி நகரத்தில் வீட்டில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி

நெல்லையில் பெண் சடலம் மீட்பு

திருநெல்வேலி நகரத்தில் வீட்டில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் வீட்டில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி நகரம் செண்பகம் பிள்ளை மேலத்தெருவைச் சோ்ந்தவா் முத்துலெட்சுமி (80). இவரின் மகள் ஜோதிமுத்து (50). இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனா்.

ஜோதிமுத்துவுக்கு மனநிலை சரியில்லையாம். இந்த நிலையில் முத்துலெட்சுமி சில நாள்களுக்கு முன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தவா், திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பினாா். அப்போது வீட்டில் ஜோதிமுத்து இறந்து கிடந்தாராம்.

இது குறித்து முத்துலெட்சுமி அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் தற்கொலை: சீவலப்பேரி அருகே உள்ள குப்பக்குறிச்சியைச் சோ்ந்த முருகனின் மகன் தங்கத்துரை (24). இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாம். இந்நிலையில், தங்கத்துரை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சீவலப்பேரி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →