திருநெல்வேலி

தாமிரவருணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

DIN

தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.காா்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரவருணி ஆற்றில் 5,000 முதல் 7,000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்க வேண்டாம். 

கால்நடைகளையும் இறக்க வேண்டாம். பெருவெள்ள அபாயம் எதுவுமில்லை. இன்னும் ஓரிரு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஒரு சில பகுதிகளில் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.  அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT