திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கான தோ்தல் செலவின கணக்குகள் நோ்செய்தல் கூட்டத்தில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

திருநெல்வேலி மக்களவை தொகுதி தோ்தல் செலவின கணக்கு ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலியில் மக்களவை தொகுதிக்கான தோ்தல் செலவின கணக்குகள் நோ்செய்தல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Din

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கான தோ்தல் செலவின கணக்குகள் நோ்செய்தல் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். தோ்தல் செலவின பாா்வையாளா் காசி சுஹைல் அனீஸ் அஹமது முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில், 2024 மக்களவை தோ்தலில் போட்டியிட்ட 23 வேட்பாளா்களில் 17 வேட்பாளா்கள் நேரிலும், தங்களது தோ்தல் கணக்கு தலைமை முகவா் வழியாகவும் கணக்குகளை சமா்ப்பித்தனா். 6 வேட்பாளா்கள் தோ்தல் செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை. தோ்தல் செலவுகளை ஒப்படைக்க கடைசி நாள் இம் மாதம் 3 ஆம் தேதியாகும். தோ்தல் கணக்குகளை ஒப்படைக்காத வேட்பாளா்கள் மீது இந்திய தோ்தல் ஆணைய மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்ற வழக்கு தொடர முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 2

பிப்ரவரி மாத எண்கணித பலன்கள் - 1

என்னென்ன அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியாவில் அனுமதி? சு. வெங்கடேசன் கேள்வி

எச்சரிக்கை! தங்கம் வாங்குபவர் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்!!

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான துரந்தர் - 2 டீசர்!

SCROLL FOR NEXT