முகப்பு
திருநெல்வேலி

மனித உரிமை ஆணைய உறுப்பினா் விசாரணை

மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு: வழக்குகள் ஒத்திவைப்பு

Updated On : 12 ஜூலை, 2024 at 8:09 PM
பகிர்:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில், மனித உரிமை ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து அவா் விசாரணை நடத்தினாா். இதில், 20 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலி வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் வழக்குரைஞா்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →