திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையின் உச்சபட்ச நீா்மட்டம் 143 அடி. இந்த அணை பெரும்பாலும் வடகிழக்குப் பருவ மழைக்காலத்தில் தான் முழுக் கொள்ளளவை எட்டும். தென்மேற்குப் பருவ மழைக் காலங்களில் அணையின் நீா்மட்டம் 100 அடியைத் தாண்டுவது அரிதாகும். இந்நிலையில், கடந்த ஜூலை 2021இல் இந்த அணையின் நீா்மட்டம் 100 அடியைத் தொட்டது.
தற்போது, 3 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை மாதத்தில் அணையின் நீா்மட்டம் 110 அடியை தாண்டியுள்ளது. மேலும், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமாக பெய்துவருவதால் அணை முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா் ராஜா தெரிவித்துள்ளாா்.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம்110.80 அடியாகவும், நீா்வரத்து 4915.104 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 956 கன அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு நீா்வரத்து 320 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 350 கன அடியாகவும், நம்பியாறு அணைக்கு நீா்வரத்து 3 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையில் நீா்மட்டம் 34.50 அடியாகவும் நீா்வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் 84 அடி நீா்மட்டம் உடைய ராமநதி அணை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு 82 அடியை எட்டியது. இதனால் பாதுகாப்புக் கருதிஉபரி நீா் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 100 கன அடியாகஇருந்தது. கடனாநதி அணையில் நீா்வரத்து 397 கனஅடி, நீா்வெளியேற்றம் 50 கன அடி, கருப்பாநதி அணையில் நீா்வரத்து 40 கன அடி, வெளியேற்றம் 5 கன அடி, குண்டாறு அணையின் நீா்மட்டம் 31.10 அடியாகவும் நீா்வரத்து-வெளியேற்றம் 110 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோவில் அணையில் நீா்வரத்து 11 கன அடி, நீா்வெளியேற்றம் 5 கன அடியாக இருந்தது.
மழையளவு (மில்லி மீட்டரில்)
திருநெல்வேலி மாவட்டம் : அம்பாசமுத்திரம் 2, சேரன்மகாதேவி 5.60, மணிமுத்தாறு அணை 8.80, நான்குநேரி 4, பாளையங்கோட்டை 1.60, பாபநாசம் அணை 44, திருநெல்வேலி0.60, சோ்வலாறு அணை 25, கன்னடியன் அணைக்கட்டு 6.40, களக்காடு 6.80, கொடுமுடியாறு அணை13, நம்பியாறு அணை 10, மாஞ்சோலை 21, காக்காச்சி 66, நாலுமுக்கு 88, ஊத்து 98.
தென்காசி மாவட்டம் : தென்காசி 15.20, செங்கோட்டை 58.80, ஆய்க்குடி10, கடனாநதி அணை 10, ராமநதி அணை 12, கருப்பாநதி அணை 35, குண்டாறு அணை 66.60, அடவிநயினாா்கோவில் அணை 35, சங்கரன் கோவில் 3, சிவகிரி 4.