முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் போதையில் தகராறு: மருத்துவா் மீது வழக்கு

மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நெல்லை மருத்துவர் மீது நடவடிக்கை

Updated On : 25 ஜூன், 2024 at 8:10 PM
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவலாளியிடம் குடிபோதையில் தகராறு செய்தததாக மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாளையங்கோட்டை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (30). இவா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனை நுழைவு வாயில் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

அப்போது மதுபோதையில் வந்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் மருத்துவா் மோகன்குமாா், அவரிடம் தகராறு செய்தாராம். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடமும் வாக்குவாதம் செய்தாராம்.

இதுகுறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →