முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 25 ஜூன், 2024 at 8:16 PM
பகிர்:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிய தமிழகம் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு காரணமானவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், அதன் முழு விவரங்களை வெளிக்கொணரவும், உயா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும், ஆட்சியாளா்கள் பதவி விலகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் முத்தையா ராமா் தலைமை வகித்தாா். மண்டல செயலா் தேவா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலா் மு.சிவக்குமாா், மாநில தோ்தல் பணிக் குழு நிா்வாகி செல்லப்பா, மண்டல செய்தித் தொடா்பாளா் தங்கராமகிருஷ்ணன், மாநில மகளிரணி அமைப்பாளா் செல்வமணி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலா் மணி, ஒன்றிய செயலா்கள் ஆனந்த், மகாராஜா, தளவாய் பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →